ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?
ஹாட் ஸ்பாட் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு படத்தினை இயக்கியவர் விக்னேஷ் கார்த்திக். திட்டம் இரண்டு படத்துக்குப் பிறகு அடியே படத்தினை இயக்கினார்.
இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் விக்னேஷ் கார்த்திக் ஹாட் ஸ்பாட் படத்தை இயக்கினார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
ஹாட் ஸ்பாட் படத்தை கே .ஜே. பி. டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்தது. சிக்ஸர் என்டெர்டைன்மெண்ட் சார்பில் தினேஷ் இப்படத்தை வெளியிட்டார்.
Advertisement
Advertisement
இப்படத்தில் கலையரசன், கெளரி கிஷன், சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், சுபாஷ் சோபியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ஹாட் ஸ்பாட் படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.