முகப்பு
செய்திகள்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 5 மே 2024, 2:37 pm IST
பகிர்:

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதன், ‘லவ் டுடே’ படத்தின் மூலம் நடிகரானார்.

இதனைத் தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சுரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும், பிரதான பாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.

இந்நிலையில், ‘ஓ மை கடவுளே’ படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார். இதனை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Advertisement

Advertisement

பிரதீப் ரங்கநாதனும், அஸ்வத் மாரிமுத்தும் இனைந்து படம் எடுக்க வேண்டும் என்று 10 வருடங்களுக்கு முன்பே முடிவு செய்ததாக அறிவிப்பு விடியோவில் பிரதீப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் டிராகன் என படக்குழுவினர் விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments