முகப்பு
செய்திகள்

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ள படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 மே 2024, 10:57 am IST
பகிர்:

நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், ஆதித்ய வர்மா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் வெற்றிப்பெற்ற அர்ஜுன் ரெட்டியின் ரீமெக்கான இப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து, மகான் படத்தில் விக்ரம் உடன் இணைந்து நடித்து பெயர்ப் பெற்றார்.

துருவ் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். இதில், நாயகியாக அனுபமா பரமேஸ்வரனும், முக்கிய கதாபாத்திரத்தில் ரஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படத்திற்கு ‘பைசன் - காளமாடன்’ எனப் பெயரிட்டுள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படப்பிடிப்பும் துவங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments