விஜய் தேவரகொண்டா பிறந்தநாளில் 2 புதிய படங்களின் போஸ்டர் வெளியீடு!
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் புதிய பட போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.
அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக அறியப்பட்டார் விஜய் தேவரகொண்டா.
2019இல் தெலுங்கில் வெளியான ‘ஜெர்ஸி’ திரைப்படத்தின் இயக்குநர் கௌதம் தின்னானுரியின் படத்தில் இணைந்துள்ளார் விஜய் தேவரகொண்டா. இது அவரது 12ஆவது படம். நானி நடிப்பில் அனிருத் இசையில் வெளியான ஜெர்ஸி திரைப்படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
விஜய் தேவரகொண்டா 13ஆவது படமான ஃபேமலி ஸ்டார் சமீபத்தில் வெளியானது. இதனை பரசுராம் பெட்லா இயக்கியிருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனை தில் ராஜூ தயாரித்திருந்தார்.
Advertisement
இந்நிலையில் மீண்டும் தில் ராஜூ தயாரிப்பில் நடிக்கிறார். இதனை ரவி கிரண் கோலா இயக்குகிறார். இது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் 59-ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இது விஜய்தேவரகொண்டாவின் எத்தனையாவது படம் எனக் குறிப்பிடப்படவில்லை.
அதே நேரத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ராகுல் சங்கிரித்யன் இயக்குகிறார். ஷியாம் சிங்கா ராய் படத்தினை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் விஜய் தேவரகொண்டாவின் 14ஆவது படம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.