கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!
வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தின் விஎஃபெக்ஸ் காட்சிகள் நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் ’கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், விஜய் பாடிய முதல் பாடல் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்தியா, ரஷியாவில் கோட் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் படப்பிடிப்புக்காக கடந்த வாரம் வெளிநாடு புறப்பட்டுச் சென்றார்.
Advertisement
Advertisement
சமீபத்தில் படத்துக்கு பிந்தைய பணிகள் தொடங்கியதாக தயாரிப்பாளர் அர்ச்சனா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு அமெரிக்காவில் லோலா விஎஃப் எக்ஸ் நிறுவனத்தில் நடிகர் விஜய் உடனான விஎஃப் காட்சிகள் நிறைவடைந்ததாகவும் இதன் இறுதிப் பகுதியை பார்க்க ஆவலாக உள்ளதாகவும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.