முகப்பு
செய்திகள்

கவனம் ஈர்க்கும் ஃபஹத் ஃபாசில்!

நடிகர் ஃபஹத் ஃபாசிலின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Updated On : 25 மே, 2024 at 4:11 PM
பகிர்:

நடிகர் ஃபஹத் ஃபாசில் மலையாள சினிமாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்தியளவில் கவனம் பெற்ற நடிகராக இருக்கிறார். ஃபஹத் நடிக்கும் ஒவ்வொரு படத்தில் அவரது நடிப்பு குறித்த விவாதங்களே நிகழும்.

சமீபத்தில் வெளியான, ஃபஹத்தின் ஆவேஷம் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் வெற்றி பெற்றதுடன் ஃபஹத்தின் நடிப்பும் பாராட்டுக்களைப் பெற்றது.

தற்போது, ‘த்ரிஷ்யம்’ படத்தின் இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில், வயநாட்டில் நகைக்கடை திறப்பு விழாவில் பங்குபெற்ற ஃபஹத் ஃபாசில் ரசிகர்களைச் சந்தித்தார். அந்தப் படத்தைப் பகிர்ந்துள்ளார். உடல் எடை குறைந்து புதிய தோற்றத்திலிருக்கும் ஃபஹத் இணையத்தில் வைரலாகி வருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →