செய்திகள்

மீண்டும் தாயாகிறார் எமி ஜாக்சன்!

எமி ஜாக்சன் கருவுற்றிருக்கிறார்.

DIN

நடிகை எமி ஜாக்சன் மீண்டும் தாயாகவுள்ளதை புகைப்படங்கள் மூலம் அறிவித்திருக்கிறார்.

தமிழில் ‘மதராசபட்டினம்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். தொடர்ந்து ஷங்கரின் ஐ, தங்கமகன், தாண்டவம், கெத்து, தெறி உள்பட சில படங்களில் நடித்தார்.

பின், மார்க்கெட் இழந்ததால் சினிமாவிலிருந்து விலகியிருந்தவர் நீண்ட நாள்கள் கழித்து அருண் விஜய்யின் 'மிஷன் அத்தியாயம் 1' படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்தது.

இதற்கிடையே இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை எமி நிச்சயதார்த்தம் செய்தார். இவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் எனவும் பெயரிட்டு வளர்த்து வந்தனர். ஆனால், திருமணத்திற்கு முன்பாகவே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

எமி ஜாக்சன் தன் கணவர் எட் வெஸ்ட்விக் உடன்...

தொடர்ந்து, எமி ஜாக்சன் ஹாலிவுட் நடிகரான  எட் வெஸ்ட்விக்கை காதலித்து வந்தார். பின், கடந்த ஆகஸ்ட் மாதம்  எட் வெஸ்ட்விக்கை திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், வெஸ்ட்விக் மூலம் எமி ஜாக்சன் கருவுற்றுள்ளார். தான் மீண்டும் தாயாகவுள்ளதைப் புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

SCROLL FOR NEXT