சீரியல் டு சீரியஸ்... வாணி போஜன் பகிர்ந்த புகைப்படங்கள்!
வைரலாகும் வாணி போஜன் புகைப்படங்கள்...
நடிகை வாணி போஜன் பகிர்ந்த புகைப்படங்கள் கவனம் பெற்று வருகின்றன.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடரில் நடித்து புகழ் பெற்ற வாணி போஜன், 2019இல் தெலுங்கில் ’மீக்கு மாத்திரமே செப்தா’ எனும் படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து, தமிழில் ’ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து இவர், ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மலேசியா டூ அம்னீசியா, மிரள், லவ் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர் நடிப்பில் வெளியான ‘செங்களம்’ இணையத் தொடரும் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. தற்போது, இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் நடிகர் அதர்வாவுடன் இணைந்து நடிக்கிறார்.
Advertisement
Advertisement
சினிமாவில் பெரிய நடிகையாகியிருக்க வேண்டியவருக்கு சரியான வாய்ப்புகள் அமையாமல் இருக்கின்றன. இந்த நிலையில், அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது, கருப்பு ஆடையில் இருக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் அதிக அளவில் லைக்ஸ் செய்து வருவதுடன் மிக அழகாக இருக்கிறார் என பாராட்டியும் வருகின்றனர்.
The photos shared by actress Vani Bhojan are gaining attention.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.