முகப்பு
செய்திகள்

பென்ஸ் படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

பென்ஸ் இசையமைப்பாளர் குறித்து...

Updated On : 4 நவம்பர் 2024, 1:44 pm IST
லோகேஷ் கனகராஜ், ராகவா லாரன்ஸ், சாய் அபயங்கர்
பகிர்:

பென்ஸ் திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கதையில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு பென்ஸ் எனப் பெயரிட்டுள்ளனர். எல்சியூ திரைப்படமாக இது உருவாகும் என லோகேஷ் அறிவித்திருந்தார்.

மேலும், படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாகவும் அனிருத் மற்றும் சாம் சிஎஸ் இருவரும் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ‘கட்சி சேர’, ‘ஆச கூட’ ஆல்பம் பாடல்களால் இசையமைப்பாளராக, பாடகராகக் கவனிக்கப்பட்ட சாய் அபயங்கர் பென்ஸ் படத்திற்கு இசையமைக்க உள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

7 பாடல்கள் கொண்ட பென்ஸ் திரைப்படத்துக்கு மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைக்கும் தகவல் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments