கமல் பிறந்தநாளில் தக் லைஃப் ரிலீஸ் டீசர்!
தக் லைஃப் அப்டேட்...
தக் லைஃப் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி டீசர் வெளியாகவுள்ளது.
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் கடந்தாண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தக் லைஃப். கேங்ஸ்டர் பின்னணியில் எழுதப்பட்ட இக்கதையின் படப்பிடிப்பு சென்னை, தில்லி, ரஷியா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது.
நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: என்னை ஆதரித்தவர்களுக்கு நன்றி: நிவின் பாலி
சில நாள்களுக்கு முன் முழுமையாகப் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இறுதியாக, நடிகை த்ரிஷாவின் நடனக்காட்சி ஒன்று மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு நாளை (நவ. 7) காலை 11 மணிக்கு 48 விநாடிகள் நேரம் கொண்ட படத்தின் வெளியீட்டுத் தேதிக்கான டீசரை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.