முகப்பு
செய்திகள்

சித்தார்த்தின் மிஸ் யூ: ரிலீஸ் தேதி!

நடிகர் சித்தார்த் நடித்துள்ள ’மிஸ் யூ’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 நவம்பர் 2024, 6:24 pm IST
மிஸ் யூ பட புகைப்படங்கள்.
பகிர்:

நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்தாண்டு வெளியான சித்தா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அடுத்து வெளியான இந்தியன் 2 திரைப்படம் சமூக வலைதளங்களில் மோசமான விமர்சனங்களைப் பெற்றன.

சித்தா படத்துக்குப் பிறகு நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்தெடுத்து வருகிறார் நடிகர் சித்தார்த்.

தற்போது காதல் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதற்கு மிஸ் யூ எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்டு புரடக்‌ஷன்ஸ் தயாரிக்க இயக்குநர் ராஜசேகரன் இயக்குகிறார்.

Advertisement

Advertisement

ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீட்டில் தமிழகமெங்கும் ’மிஸ் யூ’ திரைப்படம், நவம்பர் 29 ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு, கன்னடத்தில் புகழ்பெற்ற ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற கமர்சியல் ஹிட் படங்களை இயக்கிய என். ராஜசேகர் இதை இயக்கியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. உலகமெங்கும் ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது.

ஒரு இளைஞன் தனக்கு பிடிக்காத ஒரு பெண்ணை, தீவிரமாகக் காதலிக்கிறான் ஏன் ? எப்படி? எதற்கு? தனக்குப் பிடிக்கவில்லை எனும்போதும், நாயகன் ஏன் காதலிக்கிறான் எனும் கேள்விக்குப்பின்னால் உள்ள சுவாரஸ்யம்தான் இந்தப்படத்தின் கதை.

இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்தப் படத்தில் 8 பாடல்களை இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை உரிமையை பெரும் விலைக்கு டி சீரிஸ் பெற்றுள்ளது.

இதன் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments