சமந்தா பாணியில்... புஷ்பா -2 படத்தில் ஸ்ரீ லீலா!
புஷ்பா - 2 படத்தில் நடிகை ஸ்ரீ லீலா ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடவுள்ளார்.
புஷ்பா - 2 படத்தில் நடிகை ஸ்ரீ லீலா ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடவுள்ளார். இதற்கு முன்பு புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார்.
'ஊ சொல்றியா...' எனத் தொடங்கும் அப்பாடல் இளைஞர்களிடம் மட்டுமின்றி அனைத்துத் தரப்பு ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்டோர் கூட்டணியில் புஷ்பா -2 படம் உருவாகி வருகிறது. இப்படம் டிசம்பர் 5ஆம் தேதி திரையில் வெளியாகிறது.
Advertisement
Advertisement
புஷ்பா முதல் பாகத்தில் 'ஊ சொல்றியா ' என்கிற பாடலுக்கு சமந்தா நடனமாடினார். இதே போல் புஷ்பா இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்பாடலுக்கு கிஸ்ஸிக் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
எனினும், இதில் சமந்தாவுக்கு பதிலாக நடனமாடுவது யார் என்ற விவாதமும் சமூக வலைதளத்தில் எழுந்தது.
ஸ்ரீ லீலா நடனம்
புஷ்பா - 2 படத்தில் இடம்பெற்றுள்ள கிஸ்ஸிக் என்ற குத்துப்பாடலுக்கு நடிகை ஸ்ரீ லீலா நடனமாடியுள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், நடனமாடி நிற்பதைப் போன்ற புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது.
இதற்கு முன்பு நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படத்தில் இடம்பெற்ற பாடலில் ஸ்ரீ லீலா நடனம் மிகவும் பாராட்டப்பட்டது.
தற்போது புஷ்பா -2 படத்தில் ஸ்ரீ லீலா நடனமாடுவது உறுதியாகியுள்ளதால், இப்பாடலிலும் நடனத்தில் அசத்தியிருப்பார் என ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதனால் இப்பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது எனலாம்.
எனினும், கிஸ்ஸிக் பாடல் எப்போது வெளியாகும் என்பது குறித்த தேதி அறிவிக்கப்படவில்லை. விரைவில் இப்பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.