கோப்புப்படம் DIN
செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

DIN

ஓடிடி தளங்களிலும் வாரந்தோறும் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன. திரையரங்குகளில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கு தனி ரசிகர்கள் உள்ளதுபோல, வீட்டில் இருந்து ஓடிடியில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கும் ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமண ஆவண விடியோ வருகிற நவம்பர் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

நடிகர் வெற்றி மற்றும் நடிகைகள் அம்மு அபிராமி, சாக்‌ஷி அகர்வால், திவ்யா துரைசாமி நடிப்பில் வெளியான அதர்ம கதைகள் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் நாளை(நவ. 15) வெளியாகிறது.

காளிதாஸ் வெங்கட்டின் தோனிமா திரைப்படம், மணி தாமோதரன் இயக்கத்தில் வெளியான ஒரு தவறு செய்தால் திரைப்படம் சிம்பிளி செளத் ஓடிடி தளத்தில் தற்போது காணக்கிடைக்கிறது.

நடிகர் ஆசிஃப் அலி நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த கிஷ்கிந்தா காண்டம் படம் மலையாளம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிற நவ. 19 ஆம் தேதி வெளியாகிறது.

சென்ற வாரம் வெளியான ரஜினிகாந்த்தின் வேட்டையன், ஜீவாவின் பிளாக், சதீஷின் சட்டம் என் கையில் திரைப்படங்களை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டியின் புதிய படம்!

'நான் பொறுப்பேற்க முடியாது' - நீதிமன்றத்தில் புஸ்ஸி ஆனந்த் தரப்பு வாதம்

கரூர் பலி மனிதனால் நடந்த பேரழிவு! என்ன மாதிரியான கட்சி இது? உயர் நீதிமன்றம் கண்டனம்

பிகாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பலி, ஒருவர் காயம்

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு தயங்குவது ஏன்?: ஜெயகுமார்

SCROLL FOR NEXT