FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பிக் பாஸ் 8: செளந்தர்யா மீது புகார் தெரிவிக்கும் போட்டியாளர்கள்!

பிக் பாஸ் செளந்தர்யா மீது சக போட்டியாளர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

Updated On : 17 நவம்பர் 2024, 3:56 pm IST
செளந்தர்யா
பகிர்:

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் 6வது வாரத்தில் செளந்தர்யா மீது வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

பிக் பாஸ் சீசனின் வார இறுதி நிகழ்ச்சியான இன்று, போட்டியாளர்கள் அனைவரிடமும் விஜய் சேதுபதி உரையாடுவது வழக்கம்.

இதில் இந்த வாரத்தில் நடந்த விஷயங்கள், புகார்கள், விதிமீறல்கள் உள்ளிட்டவற்றைக் குறித்து பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி விவாதிப்பார்.

Advertisement

Advertisement

அந்தவகையில் இந்த வாரத்தில் செளந்தர்யா நடவடிக்கை மீது அனைவருக்கும் எழுந்த அதிருப்தியால், செளந்தர்யா குறித்து கேள்வி எழுப்புகிறார். இதற்கு வீட்டில் உள்ள பெரும்பாலான போட்டியாளர்கள் செளந்தர்யாவுக்கு எதிரான அடுக்கடுக்கான புகார்களை எழுப்பினர்.

பெண்கள் அணியில் உள்ள ஆர்.ஜே. ஆனந்தி உள்பட ஆண்கள் அணியைச் சேர்ந்த முத்துக்குமரன், அருண் பிரசாத், வி.ஜே. விஷால் உள்ளிட்ட பலர் புகார் செளந்தர்யா மீது எழுப்பினர்.

செளந்தர்யாவின் பேச்சு எதிலுமே உடன்பாடு இல்லாததைப் போன்று இருப்பதாகவும், பேசும்போது அதனை நிராகரிப்பதைப் போன்ற முக பாவனையைக் காட்டுவது, சொல்லும் விஷயங்களை ஆர்வமில்லாமல் பேசிவிட்டு பிறகு அதில் தீவிரத்தை வெளிப்படுத்துவது என பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர்.

பெண்கள் அணியிலும் புகார்

இதுபோன்ற விமர்சனங்கள் செளந்தர்யா மீது உள்ளதை ஒப்புக்கொள்ளும் போட்டியாளர்கள் எத்தனைபேர் என விஜய் சேதுபதி கேட்கிறார். இதற்கு பெண்கள் அணியில் உள்ள பெரும்பாலான போட்டியாளர்களும் உடன்பாடு தெரிவித்தனர்.

வீட்டில் உள்ள பலரும் செளந்தர்யா நடவடிக்கையில் புகார் தெரிவித்துள்ளதால், இது குறித்து செளந்தர்யாதான் விளக்கம் அளிக்க வேண்டும்? என விஜய் சேதுபதி கேள்வியை முன்வைக்கிறார். இது தொடர்பான முன்னோட்ட விடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

செளந்தர்யாவுக்கு பெரிய அளவிலான ரசிகர் பட்டாளம் சேர்ந்துள்ள நிலையில், செளந்தர்யா மீது சக போட்டியாளர்கள் அடுத்தடுத்து புகார்களை எழுப்பியுள்ளனர். இதனால், இன்றைய இநிகழ்ச்சியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க | பிக் பாஸ் 8: இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments