பிக் பாஸ் 10: வெற்றி பெறப்போவது யார்? டாப் 4 குறித்துப் பேசிய குமரன்!
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் டாப் 4 போட்டியாளர்கள் யார்? என்பது குறித்து குமரன் தங்கராஜ் பேசியது தொடர்பாக...
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் டாப் 4 போட்டியாளர்கள் யார் என்பது குறித்து முன்னாள் போட்டியாளர் குமரன் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 6வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த வாரத்தில் எந்தவொரு போட்டியாளரும் வெளியேற்றப்படவில்லை. கடந்த வாரம் முழுக்கவே போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடியதால், யாரும் வெளியேற்றப்படவில்லை.
முந்தைய வாரத்தில் சவின்யா, ஜாவேத் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதற்கு முன்பு, ரூ. 5 லட்சத்துடன் நடிகர் குமரன் வெளியேறினார்.
Advertisement
Advertisement
தனது தந்தை சிகிச்சைப்பெற்று வருவதால், அவருடன் இருக்க வேண்டும் எனத் தோன்றுவதாகவும், இதனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முடிவில் உறுதியாக இருப்பதாகவும் குமரன் கூறியிருந்தார்.
அதன்படி, லட்சுமி பிரியாவுடன் இணைக்கப்பட்டிருந்த கயிற்றை துண்டித்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து குமரன் வெளியேறினார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு, பிக் பாஸ் குறித்து பல்வேறு கருத்துகளை குமரன் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் வெற்றியாளர் குறித்தும் டாப் 4 போட்டியாளர்கள் குறித்தும் பேசியுள்ளார்.
இதில், வெற்றி பெற ஷாதிகாவுக்கு அதிகம் வாய்ப்புள்ளதாகவும் இவருக்கு அடுத்தபடியாக 2வது இடத்தை முனியம்மாள் பிடிப்பார் எனவும் கூறினார். மேலும், 3 இடத்தை ஜேசன் கெளசிக்கும், 4வது இடத்தை ஷமாவுக்கும் கொடுத்துள்ளார்.
நடிகர் குமரனின் கணிப்புகள் கிட்டத்தட்ட பெரும்பாலான ரசிகர்களின் விருப்பத்துடன் ஒத்துப்போவதாக பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Bigg boss 10 tamil Who will emerge victorious Kumaran discusses the top 4!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.