முகப்பு
செய்திகள்

ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற சொர்க்கவாசல் டிரைலர்!

சொர்க்கவாசல் டிரைலர் கவனம் பெற்றுள்ளது...

Updated On : 25 நவம்பர் 2024, 6:19 pm IST
பகிர்:

ஆர். ஜே. பாலாஜி நடித்துள்ள சொர்க்கவாசல் திரைப்படத்தின் டிரைலர் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள படம் சொர்க்கவாசல். இதில், செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தைத் தமிழகத்தில் டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் மூலமாக எஸ்ஆர் பிரபு வெளியிடுகிறார்.

Advertisement

Advertisement

இந்தப் படத்தின் கதைக்களம் 1999 ஆம் ஆண்டு சென்னை மத்தியச் சிறைச்சாலையில் நடந்த சிறைக் கலவரத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

முன்னதாக, படத்தின் டீசர் வெளியாகி அதன் எடிட்டிங் பலரையும் ஈர்த்தது. தொடர்ந்து, சில நாள்களுக்கு முன் வெளியான படத்தின் டிரைலரும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சிறைக்கலவரக் காட்சிகள், சிறையில் நடக்கும் அதிகார சண்டைகள் என புதுப்பேட்டை, வடசென்னை பாணியில் எதார்த்தமான படமாக இருக்குமென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments