முகப்பு
செய்திகள்

விமலின் சார் பட ரிலீஸ் தேதி!

விமல் நடிப்பில் உருவாகியுள்ள சார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 5 அக்டோபர் 2024, 11:03 am IST
பகிர்:

இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்துள்ளார்.

படத்திற்கு மா.பொ.சி (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என்று பெயரிட்டு பின் சார் என பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

கன்னி மாடம் படத்தை இயக்கிய போஸ் வெங்கட் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

Advertisement

இந்தப் படத்தில் பருத்திவீரன் சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தின் டீசர் கவனம் பெற்றது. சமீபத்தில் படத்தின் புதிய பாடலை வெளியிட்டனர். சித்து குமார் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், படம் வரும் அக்.18ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தை வெற்றிமாறன் வழங்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.