FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக சீரியலிலிருந்து விலகிய நடிகர்கள்!

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்பதற்காக சின்னத்திரை தொடரிலிருந்து சத்யா, தர்ஷிகா விலகியுள்ளனர்.

Updated On : 8 அக்டோபர் 2024, 4:43 pm IST
சத்யா / தர்ஷிகா - இன்ஸ்டாகிராம்
பகிர்:

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்பதற்காக சின்னத்திரை தொடரிலிருந்து நடிகர் சத்யா மற்றும் தர்ஷிகா ஆகியோர் விலகியுள்ளனர்.

நடிகர் சத்யா ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் அண்ணா தொடரிலும், தர்ஷிகா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பொன்னி தொடரிலும் நடித்து வந்தனர்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக். 6) முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இம்முறை 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். தீபக், சத்யா, அருண் பிரசாத், அர்னவ், விஜே விஷால், தர்ஷிகா, தர்ஷா குப்தா, அர்ஷிதா பவித்ரா ஜனனி, ஜாக்குலின் என 10 பேர் சின்னத்திரை தொடர்களில் நடிப்பவர்கள்தான்.

Advertisement

Advertisement

நடிகர் சத்யா

குறிப்பாக நடிகர் சத்யா, ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் அண்ணா தொடரில் முக்கியமானப் பாத்திரத்தில் நடித்துவந்தார். அந்தத் தொடரில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தும் கூட, அவர் பிக் பாஸ் வாய்ப்புக்காக அண்ணா தொடரில் இருந்து விலகி பிக்பாஸ் போட்டியாளராகப் பங்கேற்றுள்ளார்.

இதையும் படிக்க | திருமண வாழ்க்கையில் நுழைந்த சுந்தரி தொடர் நடிகை!

நடிகர் சத்யா, விஜய் தொலைக்காட்சியின் பனிவிழும் மலர் வனம் தொடரில் நடித்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர் என்.எஸ்.கே. ரம்யாவின் கணவராவார். என்.எஸ்.கே. ரம்யா பின்னணிப் பாடகியாக உள்ளார். இவர் என்.எஸ். கலைவாணரின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.சின்னத்திரையில் பல சிறிய பாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றவர்

நடிகை தர்ஷிகா

நடிகர் சத்யாவைப் போன்று தான் நடித்துக்கொண்டிருந்த தொடரிலிருந்து விலகியுள்ளார் நடிகை தர்ஷிகா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பொன்னி தொடரில் நடித்துவந்தார்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்பதற்காக பொன்னி தொடரில் இருந்து விலகியுள்ளார்.

மீடியா மீது மிகுந்த ஆர்வம் இருந்ததால் தொகுப்பாளராக தனது சின்னத்திரைப் பயணத்தைத் தொடங்கினார் தர்ஷிகா. பின்னர் தொடர்களில் சிறிய வேடங்களில் நடித்துவந்தார். தற்போது தொடர்களின் 2வது கதாநாயகியாக நடித்து வருகிறார். நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டனர். முறைப்படி நடனம் பயின்றவர்.

இவர்கள் இருவரும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் தொடர்களிலிருந்து விலகியுள்ளதால், அந்தத் தொடர்களில் இவர்களுக்கு மாற்றாக வேறு நடிகர்கள் நடிக்கவுள்ளனர். இது தொடர்பாக எந்தவித அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments