முகப்பு
செய்திகள்

சித்தியாக மாறிய சமந்தா..! வைரல் விடியோ!

நடிகை சமந்தா பகிர்ந்த குழந்தையுடன் கொஞ்சும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Updated On : 9 அக்டோபர் 2024, 6:01 pm IST
சித்தியாக மாறிய சமந்தா - படங்கள்: இன்ஸ்டா / சமந்தா
பகிர்:

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021-ல் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

சமீபத்தில், நடிகை சோபிதா துலிபாலாவும் நாக சைதன்யாவும் திருமணம் செய்தார்கள்.

Advertisement

சமீபத்தில் விவாகரத்துக்கு காரணம் கேடிஆர் என அமைச்சர் கொண்டா சுரேகா பேசியது சர்ச்சையானது. பின்னர் அமைச்சர் மன்னிப்பு கேட்டார்.

நேற்று ஆலியா பட்டின் ஜிக்ரா பட புரமோஷனில் கலந்துகொண்டார் சமந்தா. பின்னர் பாடகி சின்மயின் வீட்டிற்கு சென்று குழந்தையைப் பார்த்துள்ளார்.

சின்மயி உடன் சமந்தா.

4-5 நொடிகளில் தங்களது பெற்றோர்களை மறந்துவிட்ட குழந்தை. இதுதான் சித்தியின் காதல் எனக் கூறி தனது இன்ஸ்டாவில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார்.

சமந்தா பகிர்ந்த விடியோ.

நடிகை சமந்தா கடைசியாக குஷி படத்தில் நடித்திருந்தார். தற்போது, மா இன்டி பங்காரம் படத்தில் நடித்து வருகிறார். அத்துடன் சிட்டாடல் இணையத்தொடரும் வெளியாகவிருக்கிறது.

கௌதம் மேனம் இயக்கும் படத்தில் மலையாளத்திலும் சமந்தா அறிமுகமாகவிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

ஜிக்ரா புரமோஷன் நிகழ்வில் ஆலியா பட் சமந்தாவை மிகவும் புகழ்ந்து பேசியதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.