FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விசிலுக்குத்தான் வாக்கு! விடியோ பகிர்ந்த தொண்டர்! தங்கத்தை தூக்கிட்டு வரச் சொல்லி குவியும் கமெண்ட்ஸ்!

விசிலுக்குத்தான் வாக்களித்தேன் என்று பதிவான விடியோவை பகிர்ந்த தவெக தொண்டரால் சர்ச்சை..

விசிலுக்குத்தான் வாக்கு - video grab
பகிர்:

தாராபுரம் இடைத்தேர்தலில், வாக்குச் சாவடிக்குள் தடையை மீறி செல்போன் எடுத்துச் சென்று தான் வாக்களிப்பதை விடியோ எடுத்ததோடு மட்டுமல்லாமல், அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார் தவெக தொண்டர்.

அக். 6ஆம் தேதி தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், தவெக தொண்டர் ஒருவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட விடியோ பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வாக்குப்பதிவுக்கு முன்பு, தாராபுரம் தவெக எம்எல்ஏ சத்யபாமா பேசியதாக வெளியான விடியோ பரபரப்பை கிளப்பியிருந்த நிலையில், தேர்தல் முடிந்ததும், தவெக தொண்டரின் விடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Advertisement

தவெக தொண்டர் வெளியிட்ட விடியோவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமாவின் விசில் சின்னத்துக்கு எதிரே உள்ள பொத்தானை அவர் அழுத்துகிறார். பிறகு விவிபேடில் விசில் சின்னம் காட்டப்படுகிறது. அதையும் விடியோவில் பதிவாகியிருக்கிறது.

பிறகு, வாக்களித்த தன்னையும் ஒரு செல்ஃபியாக படம் எடுத்து அந்த விடியோவில் இணைத்துவிட்டார். இதோடு நிற்காமல், தான் ஒரு தவெக தொண்டன் என்பதை நிரூபிக்க தமிழக முதல்வரும் தவெக தலைவருமான ஜோசப் விஜய்யுடன், தான் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் அந்த விடியோவில் சேர்த்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.

வாக்குப்பதிவு என்பது ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதை அறியாத இந்த இளைஞர், அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருப்பதற்கு கடும் கண்டனங்கள் பதிவாகியிருப்பதோடு, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது பதிவுக்குக் கீழே பலரும் கருத்திட்டு வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments