FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இணையத்தில் வைரலாகும் ஆனந்தி! ஏன்?

நடிகை ஆனந்தியின் விடியோ வைரல்...

நடிகை ஆனந்தி
பகிர்:

நடிகை ஆனந்தியின் விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கயல் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆனந்தி. இப்படத்திற்குப் பின் பரியேறும் பெருமாள், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படங்களில் நடித்து கவனிக்கப்பட்டார்.

பின், 2021-ல் மூடர்கூடம் இயக்குநர் நவீனின் உறவினரான சாக்ரடீஸ் என்பவரைத் திருமணம் செய்த ஆனந்திக்கு ஒரு மகள் இருக்கிறார்.

Advertisement

Advertisement

தற்போது, தெலுங்கில் கரிவிடி லட்சுமி (garividi lakshmi) என்கிற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் நிஜ நாட்டுப்புற பாடகியின் வாழ்க்கைக் கதையாக உருவாகியுள்ளது. இதில், நாயகியாக ஆனந்தியும் நாயகனாக ராக் மயூர் ஆகியோர் நடித்துள்ளனர். இதனை, ராமு நாயுடு ஜம்மு இயக்க, இசையமைப்பாளர் சரண் அர்ஜுன் இசையமைத்துள்ளார்.

அக். 17 ஆம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் டிரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட ஆனந்தி நாட்டுபுற கலைஞர்கள் மேடையில் பாடுவது போல் பாடிக்காட்டினார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனந்தியின் உற்சாகமான முகத்தில் எப்போதும் குழந்தைத்தனம் இருக்கிறது என அவரின் ரசிகர்கள் அந்த விடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

A video of actress Anandhi is being widely shared on social media.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments