FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தி ஒன் யாரெனத் தெரியாது: சித்தி இத்னானி

சித்தி இத்னானி விடியோ வைரல்....

15 அக்டோபர் 2026, 1:17 pm IST
நடிகர்கள் சூர்யா, சித்தி இத்னானி
பகிர்:

நடிகைகள் சித்தி இத்னானி, தேவதர்ஷினியின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இந்தாண்டு வெற்றி பெற்ற திரைப்படங்களில் நடிகர் சூர்யாவின் கருப்பு மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படங்கள் முன்னணியில் இருக்கின்றன. அடுத்ததாக, சீன் திரைப்படம் நவ. 6 ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், ட்ரோன்ஸ் திரைப்படத்திற்காக நேர்காணலில் கலந்துகொண்ட நடிகைகள் சித்தி இத்னானி மற்றும் தேவதர்ஷினியிடம், ‘தி ஒன்’ யார்? எனக் கேள்வி கேட்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதற்கு, சித்தி இத்னானியும் தேவ தர்ஷினியும் பதில் தெரியாமல், ஏதாவது துப்பு கொடுங்கள் என்றனர். “அவர் நடித்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. மேலும், இந்தாண்டில் அவர் நடித்த இரண்டு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன” எனக் கூறப்பட்டது.

அதன் பின்பே, சித்தி இத்னானி, ‘நடிகர் சூர்யாவா?” என சந்தேகமாகக் கேட்டார். மேலும், தேவதர்ஷினிக்கும் இது தெரியவில்லை.

இந்த விடியோவை பகிர்ந்த சிலர் சூர்யாவைத் தெரியாமல் இருக்கின்றனர் என அவருக்கு எதிரான வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதேநேரம், அவர்களுக்கு சூர்யாவைத் தெரியாமல் இல்லை; தி ஒன் என்பது இப்போது வந்த பெயர் என்பதால் குழம்பியிருக்கலாம் என ஆதரவாகவும் சிலர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

ரெட்ரோ திரைப்படத்திலிருந்து சூர்யாவை அவரது ரசிகர்கள் தி ஒன் (the one) என்றே அழைத்து வருகின்றனர். சூர்யாவின் அண்மைகால திரைப்படங்களில் தி ஒன் அடையாளத்துடன் அவரது பெயரும் திரையில் வருவது குறிப்பிடத்தக்கது.

A video featuring actresses Siddhi Idnani and Devadarshini is going viral on social media.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments