முகப்பு
செய்திகள்

இட்லி கடை படப்பிடிப்பில் நித்யா மேனன்!

Updated On : 14 அக்டோபர் 2024, 11:33 am IST
பகிர்:

நடிகர் தனுஷின் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார் நித்யா மேனன்.

தனுஷ் இயக்கத்தில் இறுதியாக வெளியான ராயன் திரைப்படம் விமர்சனங்களைச் சந்தித்தாலும், ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

தொடர்ந்து, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருகிறார். இளம் தலைமுறையினரின் காதலைப் பேசும் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற கோல்டன் ஸ்பாரோ பாடல் ரசிகர்களிடம் வைரலானது.

Advertisement

இதற்கிடையே, தனுஷ் இயக்கும் 4-வது படத்தின் அறிவிப்பு வெளியானது. டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கி, நடிக்கிறார். படத்திற்கு ’இட்லி கடை’ எனப் பெயரிட்டுள்ளனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று வருவதாகத் தகவல்.

இப்படத்தில் நடிகர்கள் அருண் விஜய், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், நடிகர் தனுஷுடன் தேநீர் அருந்தும் புகைப்படத்தை நித்யா மேனன் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.