வேட்டையன் வசூல் எவ்வளவு? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வேட்டையன் வசூல்...
Updated On : 14 அக்டோபர், 2024 at 5:53 PM
வேட்டையன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் வியாழக்கிழமை வெளியானது.
முதல் நாளில் இந்தியளவில் வேட்டையன் ரூ. 30 கோடி வசூலித்ததாகத் தகவல் வெளியானது. ஜெயிலரின் முதல் நாள் வசூலான ரூ.48 கோடியை முறியடிக்கவில்லை.
Advertisement
Updated On : 14 அக்டோபர், 2024 at 5:58 PM
தற்போது, மழை காரணங்களால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வேட்டையன் வெளியான திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவுகள் வெறிச்சோடியபடி இருக்கின்றன.
இதையும் படிக்க: புதிய தோற்றத்தில் கமல்ஹாசன்... எந்தப் படத்திற்காக?
இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 240 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.