தண்டகாரண்யம் முதல் பாடல்!
தண்டகாரண்யம் படத்தின் முதல் பாடல் வெளியானது
இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராக துவங்கி பல்வேறு படங்கள் அவரது நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளன.
பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி, ஜெ பேபி, இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன.
இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படத்தை இயக்கிய அதியன் ஆதிரை தண்டகாரண்யம் படத்தை இயக்கியுள்ளார்.
Advertisement
Advertisement
நீலம் புரடக்சன்ஸ் தயாரிக்கிறது. இணை தயாரிப்பாக நீலம் ஸ்டூடியோ மற்றும் லேர்ன் அன்ட் டீச் புரடக்சன்ஸ் பிரைவேட் லிமிடேட் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இதில் அட்டகத்தி தினேஷ், கலையரசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்க, பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான லப்பர் பந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தினேஷ் பிறந்தநாளை தண்டகாரண்யம் படத்தின் முதல்பார்வை போஸ்டர் முன்னிட்டு வெளியாகியது.
இந்நிலையில், படத்தின் முதல் பாடலாக அடியே அலங்காரி எனும் பாடல் வெளியாகியுள்ளது. உமா தேவி எழுதிய இந்தப் பாடலை கிருஷ்ணராஜ், அனன்யா பட் பாடியுள்ளார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.