லப்பர் பந்து நாயகன் ஆர் தினேஷின் 26ஆவது படத்தின் அறிவிப்பு!
நடிகர் விஆர் தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் அறிவிப்பு குறித்து...
அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் விஆர் தினேஷ் தனது 26ஆவது படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை (செப்.27) வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் மதி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை வி6 ஃபிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பாக வேலாயுதம் என்பவர் தயாரித்துள்ளார்.
அட்டக்கத்தி தினேஷ் என்றழைக்கப்பட்டவர் லப்பர் பந்து படத்தின் வெற்றியின் மூலமாக கெத்து தினேஷ் என அழைக்கப்பட்டார். இவர் தற்போது பா. இரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அவரது 26ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ’ஓஜி ரூட்டு தல’ என்ற அடைமொழியுடன் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் கயல் ஆனந்தி, லிங்கேஷ், சுபா வரதராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை (செப்.28) காலை 10.10 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பா. இரஞ்சித் இயக்கியுள்ள வேட்டுவம் திரைப்படம் வரும் டிசம்பரில் வெளியாக இருக்கிறது.
Announcement of attakathi fame VR Dinesh's 26th film first look poster update!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.