FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கஜினி - 2: சூர்யா, அமீர் கான் தயார்?

கஜினி - 2 உருவாகவுள்ளதாகத் தகவல்...

Updated On : 24 அக்டோபர் 2024, 12:05 pm IST
நடிகர்கள் சூர்யா, அமீர் கான்.
பகிர்:

கஜினி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2005 வெளியான திரைப்படம் கஜினி. இதில், நாயகனாக சூர்யாவும் நாயகியாக அசினும் நடித்திருந்தனர்.

காதலிப்பவர்களுக்கு இடையேயான உறவு, மறதிகொண்ட நாயகன் வில்லன்களைப் பலிவாங்கும் காட்சிகள் என பரபரப்பான திருப்பங்களுடன் இப்படம் உருவாகியிருந்தது.

Advertisement

Advertisement

தமிழில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, ஹிந்தியில் 2008 ஆம் ஆண்டு அமீர் கானை நாயகனாக வைத்து இதே கதையை ஏ. ஆர். முருகதாஸ் ரீமேக் செய்திருந்தார். அங்கும் இப்படம் அட்டகாசமான வெற்றியைப் பெற்று பாலிவுட் பிளாக்பஸ்டரானது.

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஹிந்தியில் மது மண்டேனாவும் தமிழில் அல்லு அர்விந்தின் நிறுவனமும் தயாரிக்க முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சில மாதங்களுக்கு கஜினி - 2 படத்திற்கான ஒன்லைன் கதையை அமீர் கான் தயார் செய்ய சொன்னதாகவும் நடிகர் சூர்யாவும் இப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் ஹிந்தியிலும் தமிழிலும் படப்பிடிப்பு நடத்தப்படும் என்றும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments