செய்திகள்

நடிகை அஞ்சு குரியனுக்கு நிச்சயதார்த்தம்!

நடிகை அஞ்சு குரியனுக்கு விரைவில் திருமணம்...

DIN

நடிகை அஞ்சு குரியனுக்கு திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது.

மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் அஞ்சு குரியன். ஓம் ஷாந்தி ஓஷானா, பிரேமம், ஞான் பிரகாஷன் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றவர். தமிழில், நேரம் படத்தில் அறிமுகமான அஞ்சு குரியன் சென்னை டு சிங்கப்பூர் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார்.

மேலும், சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது, பிரபு தேவாவுடன் வுல்ஃப் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், அஞ்சு குரியன் தன் வருங்கால கணவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றதை புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் வெளியான இப்படங்களைப் பார்த்த அஞ்சு குரியனின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் புகைப்படங்களையும் வைரலாக்கி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மசோதா நகல்களை கிழித்தெறிந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

தடைசெய்யப்பட்ட ‘துரந்தர்’ பட பாடலுடன் என்ட்ரி.. சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் அதிபர் மகன்!

துல்கர் படத்தில் இணைந்த கயாது லோஹர்!

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 9

இந்திய அணியில் விளையாடிய பாகிஸ்தான் கபடி வீரர் மீது நடவடிக்கை!

SCROLL FOR NEXT