FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஸ்பைடர் மேன் - 4: ரிலீஸ் தேதி..!

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவாகும் ஸ்பைடர் மேன் 4 திரைப்படம் ரிலீஸ் தேதி குறித்த தகவல்.

Updated On : 26 அக்டோபர் 2024, 4:02 pm IST
டாம் ஹாலண்ட் நடித்த ஸ்பைடர் மேன்.
பகிர்:

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவாகும் ஸ்பைடர் மேன் 4 திரைப்படம் அவெஞ்சர்ஸ் ரிலீஸுக்குப் பிறகு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டான் லீ மற்றும் ஸ்டீவ் டிட்கோ ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கிய கற்பனைக் கதாபாத்திரமான ஸ்பைடர்-மேன், நகைச்சுவைப் புத்தகங்கள், திரைப்படங்கள் ஆகிய இரண்டிலுமே உலக அளவில் மிகப் பிரபலமான ஒரு சூப்பர் ஹீரோ.

2002-இல்  "ஸ்பைடர்-மேன்', 2004-இல் "ஸ்பைடர்-மேன் -2', 2007-ல் ஸ்பைடர் மேன் 3 ஆகிய படங்கள் முதலில் வெளிவந்தன. பிறகு, 2012-இல் "தி அமேஸிங் ஸ்பைடர்-மேன்', 2014-இல் "தி அமேஸிங் ஸ்பைடர்-மேன் 2' மற்றும் 2017-இல் "ஸ்பைடர்-மேன்: ஹோம் கமிங்' , 2019-ல் ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம், 2021இல் வே ஹோம் என இதுவரை 8 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. 

Advertisement

Advertisement

கொலம்பியா ஃபிக்சர்ஸ் தயாரிப்பில் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் ஸ்பைடர் மேன் 4 உருவாகியுள்ளது. இந்தப் படம் ஜூலை 24ஆம் தேதி வெளியாகுமென ஆங்கில ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.

அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ மே 1, 2026இல் வெளியானதுக்குப் பிறகு 2 மாதம் கழித்து வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் ஜெண்டாயா நடிப்பாரா என்பது குறித்து எத்வும் சொல்லவில்லை. அடுத்தாண்டு மே மாதத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக நடிகர் டாம் ஹோலண்ட் கூறியுள்ளார்.

கடந்த 3 ஸ்பைடர் மேன் படங்களிலும் டாம் ஹோலண்ட் பீட்டர் பார்கர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படங்களை ஜான் வாட்ஸ் இயக்கியிருந்தார்.

2017 - ஸ்பைடர்-மேன்: ஹோம் கம்மிங்

2019 - ஸ்பைட-மேன்: ஃபார் அவெ ஃபிரம் ஹோம்

2021 - ஸ்பைட-மேன்: நோ வே ஹோம்.

கடைசியாக வெளியான ஸ்பைடர் மேன் உலகம் முழுவது 1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 8ஆயிரம் கோடி) வசூலித்தது குறிப்பிடத்தக்கது. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்துக்குப் பிறகு இது வெளியானது.

இதே வகையில் 2026இல் அஞ்சர்ஸ் படத்துக்குப் பின் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஸ்பைடர் மேன் படத்தை டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே, ஷாங்ஷி & தி லெஜெண்ட் ஆஃப் தி டென் ரிங்ஸ் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த இயக்குநர் மார்வெல் படங்களில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். அடுத்து வரவிருக்கும் வண்டர் வுமன் படத்திலும் இவரது பங்கிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments