FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரவி மோகன் திரைப்படம் மிகப்பெரிய பொறுப்பு: கெனிஷா

ரவி மோகன் திரைப்படம் குறித்து கெனிஷா பேச்சு...

8 செப்டம்பர் 2026, 4:48 pm IST
பகிர்:

பாடகியான கெனிஷா ஆன் ஆர்டினரி மேன் திரைப்படத்திற்கு இசையமைத்தது குறித்து பேசியுள்ளார்.

நடிகர் ரவி மோகன் இயக்குநராக ஆன் ஆர்டினரி மேன் (An ordinary man) என்கிற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இதில் நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்க, ரவி மோகனே தயாரிக்கவும் செய்கிறார்.

இத்திரைப்படத்திற்கு கெனிஷா இசையமைக்க உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேற்கத்திய இசை பாணியில் தன் பாடல்களைப் பாடிய கவனம் பெற்றவரான கெனிஷா முதல்முறையாக இசையமைக்க உள்ளதால் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய கெனிஷா, “ஆன் ஆர்டினரி மேன் திரைப்படத்தின் திரைக்கதையை ரவி மோகன் நன்றாக எழுதி, இயக்கியுள்ளார். அவருக்கு பலமாக நல்ல இசையமைப்பாளர் கிடைக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், என்னை நோக்கி இந்த வாய்ப்பு வந்தது. முதலில் வேண்டாம் என்று இந்தத் திட்டத்தில் இணைய மறுத்தேன். பின், சரியான நேரத்தில் வந்த வாய்ப்பாக எடுத்துக்கொண்டு இதனைப் பெரிய பொறுப்பாக மாற்றிக்கொண்டேன். என் இசை கதையை மிஞ்சும் வகையில் அமைந்துவிடக்கூடாது என்பதற்காக கூர்ந்து பல இசை வகைகளை ஆராய்ந்து இப்படத்திற்கான இசையை உருவாக்கியுள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாடலான ஹையர் வருகிற செப். 10 ஆம் தேதி வெளியாகிறது.

Singer Kenisha has spoken about composing music for the film An Ordinary Man.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments