FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரவி மோகன் திரைப்படத்திற்கு இசையமைக்கும் கெனிஷா?

ரவி மோகன் இயக்குநராகும் திரைப்படத்திற்கு இசையமைக்கும் கெனிஷா...

1 செப்டம்பர் 2026, 2:53 pm IST
ரவி மோகன், கெனிஷா
பகிர்:

ரவி மோகன் இயக்குநராகும் திரைப்படத்தின் மூலம் பாடகி கெனிஷா இசையமைப்பாளராக அறிமுகமாகிறாராம்.

நடிகர் ரவி மோகன் நடித்த கராத்தே பாபு திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து ப்ரோ கோட், பென்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடிப்பதுடன், இயக்குநராக ஆன் ஆர்டினரி மேன் (An ordinary man) என்கிற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இதில் நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்க, ரவி மோகனே தயாரிக்கவும் செய்கிறார்.

இந்த நிலையில், ரவி மோகன் இயக்கும் ஆன் ஆர்டினரி மேன் திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான, இசைப் பணிகளை கெனிஷா தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து பெற நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கிடையே, பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன் உறவில் இருந்தார். இருவரும் இணைந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது; சுற்றுலா செல்வது என புகைப்படங்களை வெளியிட்டனர்.

ஆனால், சில மாதங்களுக்கு முன் கெனிஷா இனி யாருடைய வாழ்க்கையிலும் நான் இல்லை என விடியோ வெளியிட்டார். தற்போது, கெனிஷா மீண்டும் ரவி மோகனுடன் இணைவது கேள்விகளை எழுப்பியுள்ளது.

It is reported that a music composer is making their debut through the film being directed by singer Kenisha Ravi Mohan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments