ரவி மோகன் இயக்கும் படத்தில் கெனிஷா எழுத, பாடல் பாடிய சித்தார்த்!
ரவி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆன் ஆர்டினரி மேன் படத்தின் இரண்டாவது பாடல் குறித்து...
ரவி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆன் ஆர்டினரி மேன் படத்தின் இரண்டாவது பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது.
நடிகர் ரவி மோகன் இயக்குநராக ஆன் ஆர்டினரி மேன் (An ordinary man) என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்க, ரவி மோகனே தயாரிக்கவும் செய்கிறார்.
Advertisement
Advertisement
இத்திரைப்படத்திற்கு கெனிஷா இசையமைக்க உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேற்கத்திய இசை பாணியில் தன் பாடல்களைப் பாடிய கவனம் பெற்றவரான கெனிஷா முதல்முறையாக இசையமைக்க உள்ளதால் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
முதல் பாடலான, ஹையர் (higher) பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். ரவி மோகன், யங் ராஜா இப்பாடலை எழுத யங் ராஜா, ரஞ்சித் ஆகியோர் பாடியுள்ளனர்.
இந்த நிலையில், இரண்டாவது பாடலான லார்டா லபக்கா எனும் பாடல் வெளியாகியுள்ளது. இதனை கெனிஷா எழுத, சித்தார்த் & மன்னார் முத்து பாடியுள்ளார்கள்.