முகப்பு
செய்திகள்

வைரலாகும் கிச்சா சுதீப்பின் பில்லா ரங்கா பாட்ஷா!

நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் பில்லா ரங்கா பாட்ஷா படத்தின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Updated On : 3 செப்டம்பர் 2024, 6:15 pm IST
பில்லா ரங்கா பாட்ஷா - படம்: எக்ஸ் / கிச்சா சுதீப்.
பகிர்:

கன்னடத்தில் முக்கியமான நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். 1997 முதல் கன்னட சினிமாவில் நடித்துவரும் இவர் 40க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் நான் ஈ, புலி, பாகுபலி, ரத்த சரித்தரம் ஆகிய திரைப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்துள்ளார். தற்போது 4 நான்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

ஹனுமான் படத்தை தயாரித்த பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் பில்லா ரங்கா பாட்ஷா படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குகிறார் அனூப் பந்தரி.

Advertisement

Advertisement

ஏற்கனவே விக்ரந்த ரோனா படத்தில் அனூப் பந்தரியுடன் கிச்சா சுதீப் நடித்துள்ளார். இவர்கள் கூட்டணி மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.

நடிகர் சுதீப் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பிஆர்பி (பில்லா ரங்கா பாட்ஷா) படத்தின் கான்செப்ட் விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த விடியோவில் 2209ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு நாளில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கல்கி 2898 ஏடி வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்தப் படமும் வருங்காலத்தை பற்றிய படமாக இருக்குமென படக்குழு தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments