தயாரிப்பாளராக சிம்ரனின் புதிய படம்!
நடிகை சிம்ரனின் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சிம்ரன். 90-களின் இறுதி மற்றும் 2000-த்தின் துவக்கத்தில் பல நட்சத்திர நடிகர்களுடன் ஜோடியாக நடித்து புகழடைந்தவர்.
சிறிய இடைவேளைக்குப் பின் நடிகர் ரஜினிகாந்துடன் பேட்ட படத்தின் மூலம் நடிப்புக்குத் திரும்பினார். தொடர்ந்து, மகான், அந்தகன் ஆகிய படங்களில் தனக்கென கதாபாத்திரங்களை ஏற்று நடித்து கவனம் பெற்றார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சிம்ரனே தயாரித்து முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும், ’தி லாஸ்ட் ஒன்’ படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இப்படத்தை லோகேஷ் குமார் இயக்குகிறார். பான் இந்திய படமாக உருவாகவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.