FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தர்மனில் இணைந்தா ஸ்ரீலீலா!

தர்மன் திரைப்படத்தில் ஸ்ரீலீலா...

நடிகை ஸ்ரீலீலா
பகிர்:

நடிகை ஸ்ரீலீலா தர்மன் திரைப்படத்தில் இணைந்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதுவரை ரூ. 800 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள நிலையில், தமிழின் உச்ச நட்சத்திரமாக தன்னை மீண்டும் ரஜினி நிரூபித்துள்ளதாக சினிமா ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நவீன் பொலிஷெட்டி, சிம்ரன், ராஷி கன்னா, நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நடிகை ஸ்ரீலீலாவும் இப்படத்தில் இணைந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. பராசக்தி திரைப்படம் தமிழில் அறிமுகமான ஸ்ரீலீலா நடிகர் தனுஷுடன் ஓம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்தாக, தர்மனிலும் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

The production house has announced that actress Sreeleela has joined the film Dharman.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.