முகப்பு
செய்திகள்

வேட்டையன் - மனசிலாயோ கிளிம்ஸ்!

வேட்டையன் முதல் பாடல்...

Updated On : 8 செப்டம்பர் 2024, 4:08 pm IST
பகிர்:

வேட்டையன் படத்தின் முதல் பாடலின் கிளிம்ஸ் வெளியாகியுள்ளது.

இயக்குநர் த.செ. ஞானவேல் ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்றார். தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

இதில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், அனிருத் இசையமைத்த இப்படத்தின் முதல் பாடலான ‘மனசிலாயோ’ பாடல் நாளை (செப்.9) மாலை 5 மணிக்கு வெளியாகிறது. தற்போது, அதற்கான கிளிம்ஸ் விடியோவை இன்று வெளியிட்டுள்ளனர்.

அனிருத் இசையமைப்பில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை ஏஐ மூலம் பயன்படுத்தியுள்ளனர். 27 ஆண்டுகளுக்குப் பின் தொழில்நுட்ப உதவியோடு ரஜினி படத்தில் பாடியுள்ளார் மலேசியா வாசுதேவன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.