நாயகனாகும் பாலகிருஷ்ணா மகன்!
நடிகர் பாலகிருஷ்ணாவின் மகன் நாயகனாக அறிமுகமாகிறார்.
நடிகர் பாலகிருஷ்ணா தெலுங்கு சினிமாவில் நட்சத்திர நடிகராக இருப்பவர். இறுதியாக, இவர் நடித்த வீரசிம்ஹா ரெட்டி, பக்வந்த் கேசரி ஆகிய படங்கள் வசூல் ரீதியான வெற்றிப் படங்களாகின.
தொடர்ந்து, ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார்.
Advertisement
Advertisement
இவருக்கு மோக்ஷக்னா தேஜா என்கிற மகனும் நர பிரம்மனி, தேஜஸ்வினி நந்தமுரி என்கிற மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில், பாலகிருஷ்ணா மகன் மோக்ஷக்னா நந்தமுரி தெலுங்கில் நாயகனாக அறிமுகமாகிறார். ஹனுமன் படத்தை இயக்கிய பிரஷாந்த் வர்மா இப்படத்தை இயக்குகிறார். வரலாற்றுப் பின்னணியில் கதை உருவாகி வருவதாகத் தகவல்.