அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!
நடிகர் அர்ஜுன் தாஸ், நடிகை அதிதி ஷங்கர் இணைந்து நடித்துவந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
நடிகர் அர்ஜுன் தாஸ் ரசவாதி திரைப்படத்திற்குப் பின் காதல் கதையில் நடிக்க உள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடிக்கிறார்.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை குட் நைட் மற்றும் லவ்வர் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் தயாரிக்கின்றனர்.
படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் ஹெஷேம் அப்துல் வஹாப் (ஹிருதயம், குஷி) இசையமைக்க உள்ளதாகத் தகவல்.
Advertisement
Advertisement
கடைசியாக அர்ஜுன் தாஸ் நடித்த போர், ரசவாதி படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இயக்கும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்க, படத்துக்கு ‘பாம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் அதிதி ஷங்கருடன் நடித்துவந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இதன புகைப்படங்களும் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.