பிரதர் படத்தின் போஸ்டர்.  
செய்திகள்

ஜெயம் ரவியின் பிரதர் டீசர்!

ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள பிரதர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இறுதியாக வெளியான சைரன், இறைவன் திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. தொடர்ந்து, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதற்கிடையே, எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி பிரதர் படத்தில் நடித்துள்ளார்.

முதல் தோற்றப் போஸ்டர் மற்றும் படத்தின் முதல் பாடலான மக்காமிஷி பாடல் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இப்படம் வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நடிகர் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் இருவரும் தங்களது டப்பிங் பணிகளை முடித்துவிட்டார்கள். படத்தின் போஸ்ட்புரடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஸ்கிரீன் செவன் தயாரிப்பில் நட்டி, பிரியங்கா மோகன், பூமிகா உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஜெயம் ரவி தனது மனைவியைப் பிரிவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது!

பாலியல் குற்றச்சாட்டும் ஓடிடி வெளியீடும்... டாம் சாக்கோவின் சூத்ரவாக்யம்!

ஆப்பிள் ஐஃபோன் 16 ப்ரோ மேக்ஸ் விலையில் ரூ.17,000 தள்ளுபடியா? அமேஸான் அறிவிப்பு

தாக்குதலுக்குப் பின் முதல்முறையாக நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரேகா குப்தா!

சதத்தை தவறவிட்ட 2 தெ.ஆ. வீரர்கள்: ஆஸி. வெற்றிபெற 278 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT