ஓடிடியில் சூர்யாவின் சனிக்கிழமை!
நடிகர் நானி நடிப்பில் வெளியான சரிபோதா சனிவாரம் (சூர்யாவின் சனிக்கிழமை) ஓடிடியில்....
நடிகர் நானி நடிப்பில் வெளியான சரிபோதா சனிவாரம் (சூர்யாவின் சனிக்கிழமை) ஓடிடியில் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர்.
நானியின் முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ படங்கள் அமோக வரவேற்பினைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து வெளியான தசரா, ஹாய் நான்னா கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
Advertisement
Advertisement
இறுதியாக, சரிபோதா சனிவாரம் (சூர்யாவின் சனிக்கிழமை) வெளியானது. இந்தப் படம் கமர்சியல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இந்த நிலையில், இப்படம் நெட்பிளிக்ஸ் ஒடிடியில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.