முகப்பு
செய்திகள்

அமரன்: சாய் பல்லவி அறிமுக விடியோ!

நடிகை சாய் பல்லவியின் கதாபாத்திர அறிமுக விடியோவை அமரன் படக்குழு வெளியிட்டுள்ளது.

Updated On : 27 செப்டம்பர் 2024, 12:28 pm IST
அமரன் படத்தில் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன்.
பகிர்:

தென்னிந்தியாவின் பிரபலமான நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. தமிழ் மற்றும் தெலுங்கில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றன.

குறிப்பாக மலையாளத்தில் அவர் நடித்த பிரேமம் திரைப்படத்திற்கு தென்னிந்தியா  முழுவதும் நல்ல பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நடனத்திற்கென அவருக்கு தெலுங்கில் பல படங்கள் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றன.  தண்டேல் (தெலுங்கு) எனும் படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

Advertisement

சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். சாய் பல்லவி நாயகியாக நடித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

அமரன் வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ள இதன் டப்பிங் பணிகளை சாய் பல்லவி சமீபத்தில் முடித்தார்.

இந்நிலையில் சாய் பல்லவியின் கதாபாத்திர அறிமுக விடியோ வெளியாகியுள்ளது. இதில் சாய் பல்லவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments