முகப்பு
செய்திகள்

’நடுவுல வெட்டு குத்துன்னு போயிட்டேன்..’: ஜெயம் ரவி

பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஜெயம் ரவி சைரன் குறித்து பேசியுள்ளார்.

Updated On : 8 பிப்ரவரி, 2024 at 12:52 PM
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2024 at 10:27 PM

பொன்னியின் செல்வன் திரைப்படத்த்துக்குப் பின் ஜெயம் ரவியின் இறைவன் படம் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது. தொடர்ந்து, அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் எழுதி இயக்கும் 'சைரன்' என்ற படத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார்.

இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரனும் முக்கிய கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷும்  நடித்திருக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். கிரைம் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

சைரன் திரைப்படம் வருகிற பிப். 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Advertisement

இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜெயம் ரவி, “சைரன் திரைப்படம் உணர்வுப் பூர்வமான படமாக உருவாகியுள்ளது. தந்தை - மகள் இடையேயான பாசத்தை அழகாக உணர முடியும். நடுவில் கொஞ்சம் வெட்டு குத்து என படங்களில் நடித்தேன். ஆனால், இந்தப் படம் குடும்பப் படமாக இருக்கும். ஜி.வி.பிரகாஷ் மிகச்சிறப்பாக இசையமைத்துள்ளார். அவர் இந்திய அளவில் சிறந்த இசையமைப்பாளராக இருக்கிறார். இயக்குநர் ஆண்டனி பாக்கியராஜ் இன்னும் நல்ல திரைப்படங்களை எடுப்பார். இனி பெரிய மேடைகளில் அவரைக் காணலாம். அவரின் முழு உழைப்பால்தான் இப்படம் உருவாகியுள்ளது. எனக்கும் இப்படம் புது அனுபவம்தான். உங்கள் அனைவருக்கும் சைரன் புடிக்கும் என நினைக்கிறேன்” எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.