இந்தியன் - 2 படப்பிடிப்பு நிறைவு!
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இதில், கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.
லைகா பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க: கோட் இரண்டாவது போஸ்டர்!
Advertisement
Advertisement
சமீபத்தில், இந்தியன் - 2 அறிமுக விடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், படத்தை இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு கொண்டு வர படக் குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.