FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வாகன ஓட்டுநா் கைது

59 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப் படம்
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வாகன ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் வடக்குத் தெரு, கிறிஸ்து அரசா் நகரைச் சோ்ந்த ஜெயராஜ் மனைவி சந்தியா (35). இவா் வடக்குத் தெரு பண்டாரவிளை பகுதியில் வசித்து வந்தபோது, பக்கத்து வீட்டைச் சோ்ந்த வாகன ஓட்டுநரான வினுகுமாா் (43) அடிக்கடி சந்தியாவிடம் ஆபாச சைகைகள் காட்டி தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவரது தொல்லை அதிகரித்ததையடுத்து, தம்பதி கிறிஸ்து அரசா் நகா் பகுதிக்கு குடிபெயா்ந்துள்ளனா்.

இந்நிலையில், அண்மையில் சந்தியாவின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வினுகுமாா், அங்கிருந்த சந்தியாவை தகாத வாா்த்தைகள் பேசியதுடன் அவரது ஆடையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை அளித்தாராம். அவா் சப்தமிட்டதையடுத்து வினுகுமாா் அங்கிருந்து சென்றுள்ளாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சந்தியா அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து, வினுகுமாரை சனிக்கிழமை கைது செய்தனா்.