நடிகர் நானிக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்த கவின்: காரணம் என்ன?
பிரபல தெலுங்கு நடிகர் நானிக்கு கவின் நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது வைரலாகியுள்ளது.
பிக்பாஸ், சின்னத்திர மூலம் கவனம் பெற்றவர் நடிகர் கவின். ஒலிம்பியா மூவிஸின் எஸ். அம்பேத் குமார் தயாரிப்பில் கணேஷ் கே பாபு இயக்கிய ’டாடா’ படத்தில் நடிகர் கவின் நடித்திருந்தார். இதில் அபர்ணாதாஸ் நாயகியாக நடிக்க பாக்யராஜ், ஐஷ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபெளஸி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படம் தெலுங்கில் ‘பா..பா’ என்கிற பெயரில் வெளியானது.
தெலுங்கில் நானி நடிப்பில் பான் இந்திய படமாக ஹாய் நான்னா படமும் வெளியானது.
Advertisement
Advertisement
கவினின் டாடா திரைப்படம் குறித்து நேர்காணல் ஒன்றில் பிரபல தெலுங்கு நடிகர் நானி புகழ்ந்து பேசியிருந்தார். இதற்கு நடிகர் கவின் தனது எக்க்ஸ் பக்கத்தில், “நான் மிகவும் மதிக்கும் நபர் எனது படத்தினைப் பாராட்டி பேசுவது நெகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி நானி சார்” எனக் கூறியுள்ளார்.
இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.