வலிமிகுந்த கதை: அயலான் ரிலீஸ் குறித்து சிவகார்த்திகேயன்!
அயலான் படம் வெளியீட்டைக் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பதிவு வைரலாகியுள்ளது.
நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இயக்குநர் ரவிக்குமாரின் ‘நேற்று இன்று நாளை’ படம் மக்களிடையே வரவேற்பினை பெற்றது. அயலான் அவரது 2வது படம்.
இதையும் படிக்க: பொங்கல் பந்தயத்தில் வென்றதா மெரி கிறிஸ்துமஸ்? திரைவிமர்சனம்
Advertisement
Advertisement
பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தில் அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும் 4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்ட இந்திய சினிமாவின் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது.
படம் இன்று வெளியாகியுள்ளது. இதனை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன், “ஒவ்வொரு வெற்றியாளருக்கும் வலிமிகுந்த கதை இருக்கிறது. ஒவ்வொரு வலிமிகுந்த கதைக்கும் வெற்றிகரமான முடிவிருக்கிறது. வலியை ஏற்றுக்கொண்டு வெற்றிக்கு தயாராகவும். பெரிய திரைகளில் அயலான் வெளியாகியிருக்கிறது. இந்த அனுபவத்தினை உங்கள் குடும்பம் , நண்பர்களுடன் பொங்களை கொண்டாடுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.