FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

’ஒடியன்’ இயக்குநருடன் இணையும் மோகன்லால்!

நடிகர் மோகன் லாலின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 14 ஜனவரி 2024, 11:59 am IST
பகிர்:

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன் லால். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான  நேரு திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது.

இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி இயக்கத்தில் உருவாகும் மலைக்கோட்டை வாலிபன் படமும் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், ஒடியன் படத்தை இயக்கிய இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் நடிகர் மோகன் லாலை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளதை அறிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

2018 ஆம் ஆண்டு வெளியான ஒடியன் திரைப்படத்தில் மோகன் லாலின் நடிப்பு மிகப்பெரிய கவனத்தைப் பெற்றது. தற்போது, இக்கூட்டணி மீண்டும் இணைய உள்ளதால் மோகன் லால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments