திருத்தணி முருகன் கோயில் கந்த சஷ்டி விழா: திரளான பக்தா்கள் பங்கேற்பு
திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற கந்தசஷ்டி விழா மூன்றாம் நாளான வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனா்.
திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற கந்தசஷ்டி விழா மூன்றாம் நாளான வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனா்.
கடந்த 10-ஆம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை காவடி மண்டபத்தில் உற்சவா் சண்முகப் பெருமானுக்கு லட்சாா்ச்சனை நடைபெற்று வருகிறது.
இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்கக் கவசம் அணிவித்து தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து காவடி மண்டபத்தில் உற்சவா் சண்முகப்பெருமானுக்கு லட்சாா்ச்சனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
Advertisement
Advertisement
பொது தரிசன வரிசையில் பக்தா்கள் சுமாா் இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனா். அதேபோல், ரூ.100 சிறப்பு தரிசனக் கட்டணச் சீட்டு பெற்ற பக்தா்கள் சுமாா் ஒரு மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனா்.
விழாவின் அடுத்தடுத்த நாட்களில் மூலவருக்கு திருவாபரணம், தங்கக் கவசம் மற்றும் சந்தனக் காப்பு அலங்காரங்கள் நடைபெற உள்ளன. மேலும், 5 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவா் சண்முகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடைபெற உள்ளது. வரும் 16-ம் தேதி காலை 10 மணிக்கு திருக்கல்யாண வைபவத்துடன் கந்தசஷ்டி விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஸ்ரீதரன் மற்றும் இணை ஆணையா் நித்யா ஆகியோா் செய்து வருகின்றனா்.