பிரசாந்த் நீல் இயக்கத்தில் அஜித்?
இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் அஜித் குமாரை வைத்து திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப், சலார் ஆகிய படங்கள் பிரம்மாண்டமாக உருவானதுடன் மிகப்பெரிய வசூலையும் பெற்றன.
சலார் படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், பிரசாந்த் நீல் நடிகர் அஜித் குமாரை வைத்து திரைப்படத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கேஜிஎஃப் படத்திற்குப் பின்பே அஜித்துடன் பிரசாந்த் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சலார் மற்றும் துணிவு படத்தால் இருவரும் வேறு படங்களில் கவனம் செலுத்தினர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ஜெயிலர் - 2 உறுதி?
தற்போது, அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.