ரூ.80 கோடி வசூலித்த அயலான்!
அயலான் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்றுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான், நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர், அருண் விஜய்யின் மிஷன் ஆகிய படங்கள் திரைக்கு வந்தன.
பெரிதும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான அயலானும் கேப்டன் மில்லர் படமும் முதல்நாளில் நல்ல வசூலைப் பெற்றிருந்தன. ஆனால், இரண்டு படங்களுக்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்தன. அருண் விஜய்யின் மிஷன் படத்திற்கு அதிக திரைகள் கிடைக்காததால் அதன் வசூலில் பாதிப்பு இருந்தது. ஆனால், தற்போது தமிழகத்தில் மிஷன் படத்துக்கு திரைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: தங்கையின் நிச்சயதார்த்த விழாவில் நடனமாடிய சாய் பல்லவி!
Advertisement
Advertisement
இந்நிலையில், அயலான் திரைப்படம் கடந்த 10 நாள்களில் உலகளவில் ரூ.78 கோடிக்கு அதிகமாக வசூலித்துள்ளதாகவும் கேப்டன் மில்லர் திரைப்படம் ரூ.70 கோடியை வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மிஷன் படமும் ரூ.26 கோடியை வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
அயலான் 4 ஆண்டுகளுக்கு மேலாக தயாரிப்பில் இருந்து திரைக்கு வந்த படமென்பதால் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. வெளியான பின், குழந்தைகளிடம் வரவேற்பைப் பெற்றதால் வசூலில் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. இந்த வார முடிவில் ரூ.100 கோடி கிளப்பில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.